"முகவரியில்லாப் புன்சிரிப்பு", Arjunan Marriappan
பொக்கை வாய்ப் புன்சிரிப்பு
தாலாட்டும் நேரம்....
வாக்காளர் விரல்களில் மை
வேட்பாளர் முகத்தில் கலவரம்...
முன்பின் அறியாத மின்தூக்கிப் பயணியின்
முகம்...
முகநூலில்
பிரசவித்த கவிதைக்கு
லைக்குகளைத் தேடும்
கண்கள்...
வீட்டுப்பாடத்தைக்
கச்சிதமாக முடித்த மாணவனின் மனம்...
கடைசிப் பேருந்தை இளைப்பாற
நிறுத்தும் ஓட்டுநரின் கைகள்....
இருமுறையும் தடுப்பூசி போட்டுக்கொண்ட
முதியோர்களின் ஆனந்தம்..
வாழ்க்கைக்கு நம்பிக்கை
விதைகளை ஊன்றி...
ஒவ்வொரு சிரிப்பிற்கும் இங்கே முகவரியைத்
தொலைக்காமல் புன்சிரிப்பை உதிர்க்கிறது
நம் சிங்கப்பூர்...
DESCRIPTION FROM HARINI V: The poem responds to the prompt “The smile with no address”. In this poem Arjunan penns the daily moments of happiness experienced across generations, professions and other segments of society in Singapore.