"தங்கக் கூண்டில் அந்நியர்கள்", Rajan Sakthipathi

நானும் கிழவனாக, 
அவளும் கிழவியாக, 
வந்துவிட்டோம் 
இந்த முதுமை நிலைக்கு, 
ஆனால் நரைத்த பின்னும்,
காதல் இன்னும், 
பூத்தபடியே இருக்கிறது, 
ஞாபக மறதி என்ற நோய்க்கு அவள்தள்ளப்பட்டாள், 
நிஜம் தொலைத்தாள், 
நிழல் சுமந்தாள், 
எனை மறந்தாள், 
என் பெயர் மட்டும் தெரிந்தாள், 
தங்க மனம் கொண்டவளின்,
ஞாபக கூண்டில் 
அன்பானவர்களெல்லாம், 
அந்நியராகிப்போனோம்

DESCRIPTION FROM HARINI V: Responding to the prompt “strangers in a golden cage” Rajan speaks of the love between an old couple. The wife starts experiencing trouble with her Alzheimer’s or dementia, even her loved ones become strangers within the cages of her memory.

/ Rajan Sakthipathi is 27 years old and an aspiring writer. He enjoys creative writing as it helps him think through new ideas and stay confident.

READ: "coda", Felix Deng

← READ: "கவிதை என் காதல்", Rajendran Rajesh