"கவிதை என் காதல்", Rajendran Rajesh
ஆயிரம் விதிகள்
கவிஞன் அறியட்டும்,
கவிதைக்குரிய
நிபந்தனைகளைக் கருதி
எழுதட்டும்.
ஆனால், பாமர பெண்ணாக
நான் அவனுக்கு இயற்றும் பிசிறுகள்
கூடிய மொக்கைக் கவிதையில்,
ஆயிரம் அர்த்தங்கள் உள்ளதடி,
நிபந்தனைகளற்ற காதலுக்குரிய
சான்று அதுதானடி.
கண்ணெதிரே அவன்
முன் நின்று திக்குமுக்காடுவதை விட,
பேனா முனையில் திண்டாடுவது மேல் ...
என் காதலை அவனுக்குத்
தூதனுப்பும் உயிர்தோழியின் பெயர், கவிதை.
DESCRIPTION FROM HARINI V: Responding to the prompt “The poem is my love” Rajendran speaks of a poet’s conundrum in expressing her affection for her love interest. In the end Rajendran’s persona chooses to express her love in a poem and describes poetry as a friend, companion and messenger.